×

ஆண்டுக்கு 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இலக்கு: ஐஐடி இயக்குனர் காமகோடி தகவல்

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதற்காக முதன்முறையாக ‘நிர்மாண் செயல்விளக்க நாள் 2024’ என்ற பெயரில் ஸ்டார்ட் அப் முன்மாதிரிகளின் கண்காட்சி நடத்தப்படுகிறது. ஏஐ, ஹெல்த்டெக் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தங்களின் யோசனைகள் அடிப்படையிலான கண்டுபிடிப்புகளை முதலீட்டாளர்கள், தொழில்துறை நிபுணர்கள், ஐஐடி மெட்ராஸ் சமூகத்தினர் ஆகியோரிடம் ‘நிர்மாண் செயல்விளக்க நாள் 2024’ல் சமர்ப்பித்துள்ளது. ஆண்டுதோறும் இதேபோன்றதொரு நிகழ்வை நடத்தவும் இக்கல்வி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியதாவது: வருடத்திற்கு 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்ற இலக்கோடு மாணவர்கள் செயல்படுகின்றனர். இன்று மாணவர்களின் சிறந்த கண்டுபிடிப்புகள், ஸ்டார்ட் அப் ஐடியாக்களை இதில் காட்சிப்படுத்தியுள்ளனர். அக்னிகூல், ஹைபர்லூப் திட்டம் போல டீப் கோர் டெக்னாலஜியில் மாணவர்கள் பணியாற்ற உள்ளனர். ஐஐடி மெட்ராஸ், நிர்மாண் ஆகியவற்றின் முதன்முறை புத்தாக்க உணர்வுகளை நேரில் காண வருமாறு அனைவரையும் அழைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆண்டுக்கு 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இலக்கு: ஐஐடி இயக்குனர் காமகோடி தகவல் appeared first on Dinakaran.

Tags : IIT ,Kamakodi ,CHENNAI ,Indian Institute of Technology ,IIT Madras ,Nirman Demonstration Day 2024 ,Dinakaran ,
× RELATED சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ், ஏஐ சான்றிதழ் படிப்பு