குஜராத் ஆற்றுவெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பேருந்து: தமிழக, புதுச்சேரி பயணிகள் 29 பேர் மீட்பு


பாவ்நகர்: குஜராத்தில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 27 பேர் உட்பட 29 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டம் கோலியாக் கிராமம் வழியாக தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பேருந்தில் சென்றனர். நிஷ்கலங்க் மகாதேவ் கோயிலுக்குச் சென்றுவிட்டு பாவ்நகரை நோக்கிச் சென்றபோது விபத்தில் சிக்கியது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் தரைப்பாலத்தை கடக்க முயன்ற பேருந்து ஆற்று வெ ள்ளத்தில் சிக்கியது.

பேருந்தின் முன்பகுதி ஆற்றில் இறங்கிய நிலையில் பேருந்து ஆபத்தான நிலையில் நின்றது. இதனால் அதில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பேருந்தில் இருந்து பயணிகள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பேருந்தில் சிக்கிய தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 27 பயணிகள் உட்பட 29 பேர் 8 மணிநேர போராட்டத்துக்குபின் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

The post குஜராத் ஆற்றுவெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பேருந்து: தமிழக, புதுச்சேரி பயணிகள் 29 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: