உபியில் பயங்கரம்; பள்ளியின் வளர்ச்சிக்காக மாணவன் நரபலி: பள்ளி உரிமையாளர் உட்பட 5 பேர் கைது


ஆக்ரா: உபி மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஒரு தனியார் பள்ளி நடத்தி வருபவர் ஜசோதன் சிங். இவர் தனது பள்ளியின் வளர்ச்சிக்காக மாணவன் ஒருவனை நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். கடந்த 23ம் தேதி பள்ளி ஹாஸ்டலில் இருந்த 2ம் வகுப்பு படிக்கும் கீர்த்தத் என்ற மாணவனை ஜசோதன் சிங்கின் மகன் தினேஷ்,பள்ளி முதல்வர் லட்சுமண் சிங், ஆசிரியர்கள் ராம்பிரகாஷ் சோலங்கி, வீர்பால் சிங் ஆகியோர் கடத்தி சென்று கழுத்தை நெரித்து நரபலி கொடுத்துள்ளனர். உடனே மாணவனின் பெற்றோரை தொடர்பு கொண்டு கீர்த்தத்துக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு தினேஷின் காரில் அழைத்து செல்வதாக கூறியுள்ளனர்.

விரைந்து வந்த மாணவனின் பெற்றோர் காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அப்போது சிறுவன் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மாணவன் நரபலி கொடுக்கப்பட்டதை கண்டுபிடித்த போலீசார் ஜசோதன் சிங், தினேஷ், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். பள்ளி வளர்ச்சிக்காக மாணவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் உபியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post உபியில் பயங்கரம்; பள்ளியின் வளர்ச்சிக்காக மாணவன் நரபலி: பள்ளி உரிமையாளர் உட்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: