மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னையில் 2வது கட்டமாக 66 புதிய தாழ்த்தள பேருந்துகள் சேவை

சென்னை: சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக முதற்கட்டமாக 58 தாழ்த்தள பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், இரண்டாம் கட்டமாக 66 புதிய தாழ்த்தள பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அவைகள் இயக்கப்படும் வழித்தடங்கள் குறித்த விவரங்களை போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ளது.

தடம் எண் D70 அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு 5 பேருந்துகள். தடம் எண் 104 தாம்பரத்திலிருந்து செங்குன்றம்க்கு 5 பேருந்துகள். தடம் எண் 6D டோல்கேட் முதல் திருவான்மியூர் வழித்தடத்தில் 8 பேருந்துகளும், தடம் எண் 101 திருவெற்றியூர் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 2 பேருந்துகளும் தடம் எண் 104C கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வரை செல்லும் வழித்தடத்தில் 9 பேருந்துகள் இயக்கப்படும்.

27B கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணாசதுக்கம் செல்லும் வழித்தடத்தில் 5 பேருந்துகளும், தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை செல்லும் வழித்தடத்தில் 5 பேருந்துகளும், தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம் வரை செல்லக்கூடிய தடம் எண் 515 கொண்ட 5 பேருந்துகளும், தடம் எண் 70G வடபழனி முதல் கூடுவாஞ்சேரி செல்லும் வழித்தடத்தில் 6 பேருந்துகளும், தடம் எண் 18AET கிளம்பாக்கம் முதல் பிராட்வே செல்லும் வழித்தடத்தில் 10 பேருந்தும் தடம் எண் 21G பிராட்வே முதல் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் வரை செல்ல 6 பேருந்துகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகிறது.

The post மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னையில் 2வது கட்டமாக 66 புதிய தாழ்த்தள பேருந்துகள் சேவை appeared first on Dinakaran.

Related Stories: