நன்றி குங்குமம் டாக்டர்
தொண்டை வலி என்பது பொதுவான அறிகுறிகளில் ஒன்று. தொண்டை புண் இருந்தால் விழுங்கும்போது வலிக்கும். பேசும்போது கூட சில நேரங்களில் வலிக்கலாம். பெரும்பாலான தொண்டைப் புண் சில நாட்களில் மறைந்துவிடலாம். தொண்டை வறண்டு அல்லது கீறலாக இருக்கலாம். வாய் வறட்சியை கூட உணரலாம். இவை தீவிரமடைந்தால் அது கழுத்தில் அல்லது காதுகளில் வலியை ஏற்படுத்தலாம். இதற்கு உதவும் ஆயுர்வேத மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
தொண்டை வலிக்கு வெதுவெதுப்பான நீர் எப்போதுமே நிவாரணமளிக்கும். வெதுவெப்பான நீர் செரிமானத்தை மேம்படுத்த செய்யும். கொழுப்பை உடலில் சேர்க்காது. நீர் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வெதுவெதுப்பான நீர் மன அழுத்தத்தை குறைக்கும். காலையில் தூங்கி எழுந்த உடன் வெதுவெதுப்பான நீர் குடிக்கலாம். அதுபோன்று இரவிலும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு குடிக்கலாம். தொண்டை வலி சரியாகும்.
தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, தொண்டை அரிப்பு போன்ற அனைத்துக்கும் சிறந்த தீர்வு என்றால் உப்பு நீரில் வாய் கொப்புளிப்பது. ஆயுர்வேதத்தில் தொண்டை வலிக்கு ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கிறது. உப்பு நீரில் வாய்கொப்புளிப்பது தொண்டை வலிக்கு நல்ல நிவாரணியாக இருக்கும்.துளசி இலைகளை வெறுமனே வாயில் போட்டு மெல்லலாம். அல்லது கொதிக்க வைத்த நீரில் துளசி இலையை சேர்த்து குடிக்கலாம். தொண்டை வலி நீங்கும்.
அதிமதுரம் இனிப்புத்தன்மை கொண்டது. இது சளி ஜலதோஷம் காய்ச்சல் அறிகுறிகளை கட்டுப்படுத்த செய்யும். தொண்டை. புண் பிரச்னைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிகப்படியான சளி உற்பத்தியை கட்டுப்படுத்த செய்யும். சுவாசக்குழாயில் இருக்கும் சளியை தளர்த்துவதால் நெரிசலைக் குறைத்து இருமலை எளிதாக்க செய்கிறது.அதிமதுரம் தேநீரில் கலந்து எடுக்கலாம். நீரை கொதிக்க வைத்து சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.
மஞ்சள் ஆயுர்வேதத்தில் வீக்கம் அல்லது ஜலதோஷத்துக்கு சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, இரவு படுக்கும் முன்பு ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர, தொண்டை வலி, தொண்டைப் புண் சரியாகும்.தொண்டை வலி, தொண்டைப் புண் பிரச்னைக்கு தேன் சிறந்த மருந்தாக இருக்கும். தேன் வீக்கத்தை குறைக்கிறது. சளியை கரைத்து வெளியேற்றுகிறது. தேனில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்டது. இது தொண்டைப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.வெதுவெதுப்பான நீரில் தேனை சேர்த்து குடித்துவருவது தொண்டைப்புண்ணை சரி செய்ய உதவும்.
தொகுப்பு: ரிஷி
The post தொண்டைப் புண் குணமாக எளிய வழிகள்! appeared first on Dinakaran.