மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக உயர்வு!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் உள்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீதர், நிதிஷ்குமார், வாசு மற்றும் சதீஸ் குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக போலீசார் முதல்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மம்சாபுரத்திலிருந்து இன்று காலை 8 மணியளவில், மினி பஸ் ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் பள்ளி, கல்லுாரி செல்வோர், பணிக்கு செல்வோர் என சுமார் 30 பேர் சென்றனர்.

பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடது புறம் உள்ள பள்ளத்தில் கவிழ்த்தது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் போலீசார், வருவாய்த் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தை தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மம்சாபுரத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்கவும், ரோட்டை அகலப்படுத்த கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுப்பட்டுள்ளார்.

 

The post மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக உயர்வு! appeared first on Dinakaran.

Related Stories: