×

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், செப்.27:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், தினகூலி மற்றும் ஓப்பந்த அடிபடையிலான பணிநியமனங்களை ரத்து செய்து ஏற்கனவே இந்த முறையில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணி வரன்முறைபடுத்தி காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், தேசிய கல்வி கொள்கையினை ரத்து செய்ய வேண்டும், வருமானவரி உச்சவரம்பை ரூ 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியறுத்தப்பட்டது.

The post அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Government ,Employees Union ,Tiruvarur ,Tamil Nadu Government Employees Union ,
× RELATED இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்