×

ஜெயங்கொண்டம் அருகே பரிதாபம்; கார், மினி லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி: 2 பேர் படுகாயம்

ஜெயங்கொண்டம், செப்.27: ஜெயங்கொண்டம் அருகே கார், மினி லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர். சிதம்பரம் அம்மாபேட்டை அனந்தராயன் தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (52). இவரும், இவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த குமார் (54) மற்றும் கிருஷ்ணகுமார் (36)ஆகியோருடன் திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு மீண்டும் சிதம்பரம் செல்வதற்காக கிருஷ்ணகுமார் கார் ஓட்ட குமார் மற்றும் அறிவழகன் இருவரும் பின்னால் உட்கார்ந்து வந்து கொண்டிருந்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து கங்கைகொண்ட சோழபுரம் அருகே பொன்னேரி இறக்கத்தில் கார் சென்று கொண்டிருந்தனர். இதில் எதிரே சிதம்பரத்திலிருந்து மதுரைக்கு இறால் ஏற்றி சென்ற மினி லாரியும், காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேராக மோதியது.

இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பாலத்து கட்டையில் மோதி பள்ளத்தில் விழுந்தது. இதில் காரில் பயணித்த மூவரில் சிதம்பரம் அம்மாபேட்டை அனந்தராயன் தெருவை சேர்ந்த அறிவழகன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டி வந்த கிருஷ்ணகுமார் காரில் பின் பக்கம் பயணம் செய்த குமார் ஆகிய இரண்டு பேரும் லேசான காயங்களுடன் உயிர்த்தபினர். காயமடைந்த இருவரும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த கோர விபத்தில் இறால் ஏற்றி வந்த மினி லாரி பின்பக்க உள்ள இரண்டு சக்கரங்களும் பெயர்ந்து ஒன் சைடு ஆக காலையில் சாய்ந்து கிடந்தது. அதேபோல் காரில் முன்பக்க டயர் உடைந்து ஓடிய கார் அருகே உள்ள பாலத்தில் மோதி பள்ளத்தில் விழுந்தது.

சாலையில் சாய்ந்து கிடந்த மினிலாரியால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீன்சுருட்டி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். கார் விபத்தில் இறந்து போன அறிவழகனின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் மினி லாரி டிரைவர் ராமு என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

The post ஜெயங்கொண்டம் அருகே பரிதாபம்; கார், மினி லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி: 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Jeyangondam ,Jayangkondam ,Anantharayan Street ,Ammapet, Chidambaram ,Kumar ,
× RELATED பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து விதிகள் விழிப்புணர்வு கூட்டம்