×

நாகப்பட்டினத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு சாலை விரிவாக்க பணி

நாகப்பட்டினம்,செப்.27: நாகப்பட்டினம் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் சாலை சந்திப்பு விரிவாக்க பணிகளை சாலை பாதுகாப்பு கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை மற்றும் கட்டுமான துறை முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் சாலை சந்திப்புகளை விரிவாக்கம் செய்ய ஆய்வுகள் நடத்தப்படுகிறது.

இதன்படி நாகப்பட்டினம் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் சாலை சந்திப்பு விரிவாக்க பணிகளை சாலை பாதுகாப்பு கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். விபத்துக்களை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து குறியீடுகள், சோலார், ஒலிப்பான், கைக்காட்டிகள், வேகத்தடை ஆகியவற்றை அமைக்க ஆலோசனை வழங்கப்பட்டது. திருச்சி கோட்ட பொறியாளர் புவனேஸ்வரி, உதவி கோட்ட பொறியாளர் கார்த்திகா, நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை கோட்ட பொறியாளர் நாகராஜன், உதவி கோட்ட பொறியாளர் விவேகானந்தன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

The post நாகப்பட்டினத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு சாலை விரிவாக்க பணி appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,KARTHIKEYAN ,VILUPURAM ,PUDUCHERRY ,CUDALUR ,NAGAPATTNAM ,Dinakaran ,
× RELATED டிச.26ம் தேதி முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்