×

முதல்வர் கோப்பைக்கான வாலிபால் போட்டி திருவேங்கடம் கலைவாணி பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் வென்றது

திருவேங்கடம், செப். 27: தமிழக அரசு சார்பில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான வாலிபால் விளையாட்டு போட்டி தென்காசி மாவட்டம் மடத்தூரில் உள்ள இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் மாணவர்கள் பிரிவில் 58 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இதில் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 3ம் இடம் பெற்றனர். இதேபோல் மாணவிகள் பிரிவில் 18 பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் கலைவாணி பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இதைத்தொடர்ந்து சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வரும் நிர்வாகியுமான பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் ஊர் மக்கள் பாராட்டினர்.

The post முதல்வர் கோப்பைக்கான வாலிபால் போட்டி திருவேங்கடம் கலைவாணி பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் வென்றது appeared first on Dinakaran.

Tags : Thiruvenkatam Kalaivani School ,Principal's Cup volleyball ,Thiruvenkadam ,Tamil Nadu Government ,District Level Chief Minister's Cup Volleyball Tournament ,Hindu Nadar Middle School ,Madathur, Tenkasi District ,Principal's Cup Volleyball Tournament ,Thiruvenkadam Kalaivani School ,Dinakaran ,
× RELATED திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு, சம்போ...