மாதவரத்தில் கனமழை காரணமாக வீடுகளை கழிவுநீர் சூழ்ந்தது: மின்தடையால் மக்கள் தவிப்பு

திருவொற்றியூர்: வடசென்னையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் தங்கசலை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் போன்ற பல பகுதிகளில் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மாதவரம் போன்ற பகுதிகளில் தாழ்வான சாலையில் வெள்ளம் சூழ்ந்தது. தொடர் மழை காரணமாக மின் மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக எல்லையம்மன் கோயில் தெரு, தேரடி போன்ற பல்வேறு பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் மின்சாரம் தடை ஏற்பட்டு வீடுகள் இருளில் மூழ்கின.

தெருவிளக்குகள் எரியாததால் இருளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மாதவரம் தணிகாசலம் நகரில் கால்வாய் பணி நடைபெறுவதால் அந்த கால்வாய் தற்காலிகமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து கால்வாய்களை வெட்டி மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தினர்.

The post மாதவரத்தில் கனமழை காரணமாக வீடுகளை கழிவுநீர் சூழ்ந்தது: மின்தடையால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: