தர பரிசோதனையில் அதிர்ச்சி பாராசிட்டமால் உள்பட 53 மருந்துகள் தோல்வி

புதுடெல்லி: நாடு முழுவதும் சளி, காய்ச்சல், தலைவலி போன்று அனைவரும் பாதிக்கப்படும் பொதுவான உடல் பிரச்னைகளுக்கு பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் பாராசிட்டமால், சர்க்கரை, உயர் ரத்த அழுத்த மாத்திரைகள் உட்பட 53க்கும் அதிகமான மருந்துகள் இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரின் தர சோதனையில் தோல்வியடைந்துள்ளன. இந்த மருந்துகளின் பட்டியலில் தினசரி எடுக்கும் பல மருந்துகளும் அடங்கியுள்ளன. அதன் விவரம்:

வைட்டமின் சி மற்றும் டி3 மாத்திரைகள் ஷெல்கால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் சி சாப்ட்ஜெல்கள், ஆன்டிஆசிட் பேன்-டி, பாராசிட்டமால் ஐபி 500மிகி, நீரிழிவு எதிர்ப்பு மருந்து க்ளிமிபிரைடு, உயர் ரத்த அழுத்த மருந்து டெல்மிசார்டன் மற்றும் பல அடங்கும்.  பாராசிட்டமால் மாத்திரைகளும் தரமற்றவையாக இந்த சோதனையில் உறுதி செய்யப்பட்டு, மக்கள் இவற்றை எடுக்கக்கூடாது என ஒன்றிய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.

The post தர பரிசோதனையில் அதிர்ச்சி பாராசிட்டமால் உள்பட 53 மருந்துகள் தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: