×

அதிபர் பைடனின் 2 திட்டங்களின் கீழ் அமெரிக்காவுக்குள் நுழைந்த 13 லட்சம் பேரை வெளியேற்றுவேன்: டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், பைடனின் 2 திட்டங்களின் கீழ் அமெரிக்காவில் நுழைந்த 13 லட்சம் பேரை வெளியேற்றுவேன் என டிரம்ப் எச்சரித்துள்ளார். முன்னாள் அதிபர் டிரம்ப், தனியார் தொலைக்காட்சியிடம் பேசுகையில், ‘‘புலம்பெயர்ந்தோர் நேரடியாக தெற்கு எல்லைக்கு புகலிடம் தேடி வர வேண்டாம் என்று கூறி அதிபர் பைடன் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட இரண்டு குடியேற்றத் திட்டங்கள் பிராந்தியத்தை குழப்பமானதாக மாற்றப்பட்டது.

இரண்டு திட்டங்களின் கீழ் அமெரிக்காவிற்குள் நுழைந்த 13 லட்சத்துக்கும் அதிகமான மக்களை வெளியேறச் செய்வேன்.நீங்கள் வெளியேறத் தயாராகுங்கள், ஏனென்றால் நீங்கள் மிக வேகமாக வெளியேற்றப்படுவீர்கள்’’ என்றார். டிரம்ப் ஏற்கனவே அதிபராக இருந்த காலத்தில், நாடுகடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,50,000 ஐ எட்டவில்லை. கடந்த சில ஆண்டுகளில் குவாதமாலா, கியூபா, வெனிசுலாவை சேர்ந்த ஏராள மானவர்களுக்கு பைடன் அரசு புகலிடம் அளித்துள்ளது.

The post அதிபர் பைடனின் 2 திட்டங்களின் கீழ் அமெரிக்காவுக்குள் நுழைந்த 13 லட்சம் பேரை வெளியேற்றுவேன்: டிரம்ப் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : US ,President Biden ,Trump ,Washington ,Biden ,Former ,President ,United States ,
× RELATED இத்தாலி பிரதமருடன் எலான் மஸ்க் டேட்டிங்? வைரலாகும் புகைப்படங்கள்