மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை அணு ஆயுத கொள்கையை மாற்றிய ரஷ்ய அதிபர் புடின்

மாஸ்கோ: ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் இரண்டரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்கி உதவி வருகின்றன. இதன் மூலம் உக்ரைன் ராணுவம் அவ்வப்போது ரஷ்யாவின் எல்லையில் டிரோன், ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் புதிய அணுகுண்டு கொள்கைகளை நேற்று முன்தினம் வெளியிட்டார். அதன்படி, அணு ஆயுதம் வைத்திராத ஒரு நாடு, அணு ஆயுதம் வைத்துள்ள நாட்டின் ஆதரவுடன் ரஷ்யாவுக்கு எதிராக மோதினால் அது தனது இறையாண்மைக்கு அச்சுறுத்தலான கூட்டு தாக்குதலாக கருதப்படும் என்று புடின் அறிவித்துள்ளார்.

மேலும், பெரிய அளவிலான வான்வழி தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் அதற்கு பதிலடியாக ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்தும் என்றும் அறிவித்துள்ளார். இது உக்ரைனை ஆதரிக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று கூறி உள்ளார்.

The post மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை அணு ஆயுத கொள்கையை மாற்றிய ரஷ்ய அதிபர் புடின் appeared first on Dinakaran.

Related Stories: