ஆண்டிபட்டி, செப். 27: ஆண்டிபட்டி அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 98 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தம்பதியை கைது செய்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள க.விலக்கு பகுதியில் அமைந்துள்ள பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்பிரிவு போலீசார், க.விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் க.விலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பிரபா தலைமையிலான போலீசார் பெருமாள்கோவில்பட்டியில் அமைந்துள்ள செல்லதுரை(42)மற்றும் அவரது மனைவி ஜெயந்தி(38) என்பவரின் வீட்டை சோதனை செய்தனர்.
சோதனையில் வீட்டில் ரூ.69,700 மதிப்பிலான 97.245 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வீட்டில் பதுக்கி வைத்து புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த செல்லத்துரை மற்றும் ஜெயந்தியை க.விலக்கு போலீசார் கைது செய்தனர்.
The post ஆண்டிபட்டி அருகே 98 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: தம்பதி கைது appeared first on Dinakaran.