×

₹1.85 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

திருச்செங்கோடு, செப்.27: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாராந்திர பருத்தி ஏலம் ரகசிய டெண்டர் முறையில் நேற்று நடந்தது. பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிரா நல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து 84 விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர். பிடி ரகம் குவிண்டால் ₹6879 முதல் ₹8399 வரை விற்பனையானது. இதில் மொத்தம் ₹1.85 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

The post ₹1.85 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Tiruchengode Agricultural Producers Cooperative Sales Society ,Musiri Pudupatti ,North Nalliyampatti ,South Nalliyampatti ,Thandalai ,Thiruthalaiyur ,Senganam ,Rasipuram ,Katira Nallur ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது