×

மேல ஆழ்வார்தோப்பில் விழிப்புணர்வு முகாமில் மரக்கன்றுகள் வழங்கல்

வைகுண்டம், செப். 27: மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை ஏழைப் பெண்களுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வைகுண்டம் தாசில்தார் ரத்ன சங்கர் தலைமை வகித்தார். துணை தாசில்தார் பாண்டியராஜன், கிராம உதயம் கிளை அலுவலக நிர்வாக மேலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தன்னார்வ தொண்டர் ராமச்சந்திரன் வரவேற்றார். கிராம உதயம் நிறுவனர் சுந்தரேசன், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் மூலம் ஏழை பெண்கள் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதுடன் தங்களது குடும்பத்தின் வளர்ச்சிக்காக செயலாற்றுவது குறித்து பேசினார். தன்னார்வ தொண்டர்கள் முருகசெல்வி, பிரேமா, லிஜியா, ஆரிய நாச்சியார் உள்ளிட்டோர் பேசினர். முகாமில் பங்கேற்ற 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மரக்கன்றுகளும், பிளாஸ்டிக் தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக துணிப்பைகளும் வழங்கப்பட்டது. கிளை அலுவலக தலைமை கணக்காளர் ஜெசிந்தா மலர்மதி நன்றி கூறினார்.

The post மேல ஆழ்வார்தோப்பில் விழிப்புணர்வு முகாமில் மரக்கன்றுகள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Mela ,Alwarthop ,Mela Alwartopu Grama ,Udayam ,Vaigundam ,Tahsildar Ratna Shankar ,Deputy ,Tahsildar Pandiyarajan ,Mela Alwarthop ,Dinakaran ,
× RELATED திருவாடானையில் டிஎஸ்பி அலுவலகத்தில் பெட்டிசன் மேளா