×
Saravana Stores

தனிப்பிரிவு காவலர்கள் 27 பேர் இடமாற்றம்

தென்காசி, செப். 27: தென்காசி மாவட்டத்தில் காவல் நிலையங்கள் மற்றும் எஸ்பி அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணிபுரிந்து வந்த தனிப்பிரிவு காவலர்கள் 27 பேரை இடமாற்றம் செய்து எஸ்பி னிவாசன் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து வரும் தனிப்பிரிவு காவலர்களின் பணி மிகவும் இன்றியமையாதது ஆகும். பிரச்னைகளின் உண்மை தன்மை, புலனாய்வு, உளவுத்தகவல்கள் ஆகியவற்றை திரட்டும் முக்கிய பணியில் தனிப்பிரிவு காவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தற்போது தென்காசி மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 27 தனிப்பிரிவு காவலர்களை வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்து தென்காசி மாவட்ட எஸ்பி னிவாசன் உத்தரவிட்டுள்ளார்.‌

The post தனிப்பிரிவு காவலர்கள் 27 பேர் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,SP ,Nivasan ,Dinakaran ,
× RELATED தென்காசி குற்றால அருவிகளில் குளிக்க தடை..!!