பீகார் மாநிலத்தில் ஜிதியா பண்டிகை கொண்டாட்டத்தின்போது நீரில் மூழ்கி 37 குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழப்பு..!!

பீகார்: பீகார் மாநிலத்தில் ஜிதியா பண்டிகை கொண்டாட்டத்தின்போது நீரில் மூழ்கி 37 குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்துள்ளனர். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக ‘ஜித்தியா’ பண்டிகை கொண்டாடப்படுகிறது. தங்கள் குழந்தைகளும் நலனுக்காக பெண்கள் விரதம் இருந்து தங்கள் பிள்ளைகளுடன் ஆற்றில் நீராடுவது வழக்கம். அந்த வகையில், கிழக்கு மற்றும் மேற்கு சம்பரான், அவுரங்காபாத், கைமூர், பக்சர், சிவன், ரோஹ்தாஸ், சரண், பாட்னா, வைஷாலி, முசாபர்பூர், சமஸ்திபூர், கோபால்கஞ்ச் மற்றும் அர்வால் மாவட்டங்களில் நீரில் மூழ்கிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

முன்னதாக ஔரங்காபாத் மாவட்டத்தில் 8 குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்தனர். நான்கு பேர் பருனா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இட்டாஹட் கிராமத்திலும், மேலும் நான்கு குழந்தைகள் மதன்பூர் காவல் நிலையத்தின் குஷாஹா கிராமத்திலும் உயிரிழந்தனர். மதன்பூர் தொகுதியில் உள்ள குஷாஹா கிராமத்திலும், பருன் தொகுதியில் உள்ள இதாஹத் கிராமத்திலும் உள்ள இரண்டு தனித்தனி குளங்களில் தலா நான்கு பேர் மூழ்கி உயிரிழந்தனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையாக அறிவித்தார். இந்நிலையில் 3 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் மொத்தம் 15 மாவட்டங்களில் புனித நீராடியவர்களில் 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் இதில் 37 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் 3 பேர் காணவில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.

The post பீகார் மாநிலத்தில் ஜிதியா பண்டிகை கொண்டாட்டத்தின்போது நீரில் மூழ்கி 37 குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: