பெரம்பலூரில் டூவீலர் திருடிய 2 பேர் கைது

பெரம்பலூர், செப். 26: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, சித்தளி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிரஷரில் வேலை பார்த்து வரும், உளுந்தூர்பேட்டை சித்தானங்கூரைச் சேர்ந்த சூர்யா என்பவர் தான் பெரம்பலூரில் தங்கி இருக் கும் இடத்தில் நிறுத்தி இருந்த, தனது இரு சக்கர வாகனத்தைக் காண வில்லை என்று பெரம்ப லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்தப் புகாரின் அடிப்ப டையில்பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதன்படி பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி, பெரம்பலூர் போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் ராம்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மேற்படி இருசக்கர வாகன திருட்டு வழக்கு தொடர்பாக விசா ரணை செய்யப்பட்டது. இந்த வழக்கில் கண் காணிப்புக் கேமராக்களை ஆய்வுசெய்தும், பல்வேறு கோணங்களில் விசாரணை செய்ததிலும் மேற்படிதிருட்டில்ஈடுபட்டது பெரம்பலூர் மாவட்டம், கீரனூர், வயலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் ஆனந்த குமார் (26), அரியலூர் மாவட்டம், செந்துறை மாதா கோவில் தெருவை சேர்ந்த லக்ஷ்மணன் மகன் சந்துரு (21) ஆகிய இருவரும் இணைந்து இருசக்கர வாக னத்தைத் திருடியது விசார ணையில் தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று (25 ஆம் தேதி) ஆனந்தகுமார், சந்துரு ஆகிய இருவரை யும் கைதுசெய்து வழக்குப் பதிவு செய்து, அவர்களிட மிருந்து காணாமல் போன இருசக்கர வாக னத்தை பறிமுதல் செய்த பெரம்பலூர் போலீசார் இருவரையும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறை க்கு அனுப்பிவைத்தனர். எண்ணெய் பனை பயிரிட் டுள்ள விவசாய நிலத் திற்குச் சென்று பார்வை யிட்ட மாவட்ட கலெக்டர், விவசாயியிடம் ஆண்டுக்கு எத்தனை முறை பாமாயில் பழக்குலைகள் சாகுபடி செய்யப்படுகிறது, இதன் மூலம் எவ்வளவு வரு மானம் கிடைக்கப் பெறு கிறது, அரசு மானியம் முழு வதும் கிடைக்கப் பெறு கிறதா எனவும் மொத்த மகசூல் விபரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

 

The post பெரம்பலூரில் டூவீலர் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: