உடன்குடி, செப். 26: குலசேகரன்பட்டினத்தில் விஸ்வ பிரம்மா ஆராதனை பூஜை நடந்தது. உடன்குடி விஸ்வ பிரம்ம திருப்பணி குழு மற்றும் தமிழ்நாடு விஸ்வகர்ம காயத்ரி தேவி சேவார்த்திகள் சங்கத்தின் 9ம் ஆண்டு விழா மற்றும் விஸ்வ பிரம்மா ஆராதனை விழா, குலசேகரன்பட்டினத்தில் நடந்தது. இதையொட்டி விஸ்வ பிரம்மாவிற்கு காலை 5 மணிக்கு விஸ்வ சித்தி யாகம், மதியம் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடந்தது. இதில் வில்லிபுத்தூர் வாரியர்க்கன் பன் குருசாமி, தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்க நிறுவனர் பாரத் ஜோதி சேகர், சேலம் விஸ்வ தமிழ் கழகம் நிறுவன தலைவர் சுடலைமுத்து, ஆடிட்டர் முத்துசாமி, திருப்பணி குழு மாநில துணை தலைவர் சுகுமார், உடன்குடி சண்முகசுந்தரம், பேச்சிமுத்து, லெட்சுமண பெருமாள், முத்துராஜ், சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post குலசேகரன்பட்டினத்தில் விஸ்வ பிரம்மா ஆராதனை பூஜை appeared first on Dinakaran.