×

வேடசந்தூரில் நீதிமன்றம் புறக்கணிப்பு

வேடசந்தூர், செப். 26: வடமதுரை அருகே பிலாத்து பகுதியை சேர்ந்தவர் பகவத்சிங். வழக்கறிஞர். இவர் கடந்த செப்.15ம் தேதி இவரை ஒரு பிரச்னை காரணமாக ஒரு தரப்பினர் தாக்கினர். இதுகுறித்து பகத்சிங் அளித்த புகாரில் 4 பேர் மீது வழக்குப்பதிந்து ஒருவரை கைது செய்தனர். மேலும் அத்தரப்பினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பகத்சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதை கண்டித்தும், தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று வேடசந்தூர் நீதிமன்றம் முன்பு காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக நீதிமன்றத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

The post வேடசந்தூரில் நீதிமன்றம் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Vedasandoor ,Vedasandur ,Bhagavatsingh ,Pilate ,Bhakatsing ,
× RELATED வேடசந்தூர் அருகே அய்யலூர் சந்தையில்...