×

ண்ணீர் பிடிப்பதில் தகராறு சமாதானம் செய்தவரை தாக்கிய பெண் கைது

நெல்லை, செப்.26: ஏர்வாடி அருகே கோதைசேரியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (59). இவரது மனைவி தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அதேபகுதியை சேர்ந்த சொர்ணம், மகராசி (38) ஆகியோரும் தண்ணீர் பிடித்தனர். தண்ணீர் படிப்பதில் தகராறு ஏற்பட்டது. முத்துராமலிங்கம், சொர்ணம், மகராசியை சமாதானம் செய்து அனுப்பினார். பின்னர் வீட்டு முன் நின்ற முத்துராமலிங்கத்தை சொர்ணம், மகராசி ஆகியோர் அவரை அவதூறாக பேசி கம்பால் தாக்கியதில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் எஸ்ஐ நித்யா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மகராசியை கைது செய்தார். சொர்ணத்தை தேடி வருகின்றனர்.

The post ண்ணீர் பிடிப்பதில் தகராறு சமாதானம் செய்தவரை தாக்கிய பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Muthuramalingam ,Kothaisery ,Airwadi ,Sornam ,Maharasi ,Dinakaran ,
× RELATED கேரளத்தில் இருந்து வாகனங்களில்...