டீஸ்டா நதி நீர் பங்கீடு இந்தியாவுடன் வங்கதேசம் விரைவில் பேச்சுவார்த்தை

டாக்கா: கடந்த 2011ம் ஆண்டுஅப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வங்கதேசத்துக்கு சென்றபோது டீஸ்டா நதி நீர் பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறையை காரணம் காட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதனை ஏற்கவில்லை. இந்த ஒப்பந்தம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில் டாக்காவில் பகிர்வு செய்யப்பட்ட நதிகளில் வங்கதேசத்தின் நியாயமான பங்கீடு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்குகளில் பேசிய நீர்வளத்துறை ஆலோசகர் சையதா ரிஸ்வானா ஹசன், எல்லை தாண்டிய நதிகளில் இருந்து நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் . இதுபோன்ற பிரச்னைகளில் ஒருதலைப்பட்சமாக ஒரு நாடு சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது. ஆனால் இருநாடுகளும் செல்ல வேண்டும்” என்றார்.

The post டீஸ்டா நதி நீர் பங்கீடு இந்தியாவுடன் வங்கதேசம் விரைவில் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: