பள்ளி வளாகங்கள் அருகே கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு!

மதுரை : பள்ளி வளாகங்கள் அருகே கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா, கூல் லிப் போன்ற பொருட்களை தடை செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பனை செய்ததாக பிணை, முன்பிணை கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழகத்தில் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருளைப் பயன்படுத்தும் மாணவா்கள் போதைக்கு அடிமையாகி வருவதாக வேதனை தெரிவித்த நிலையில், கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை தாமாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து, அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், பள்ளி வளாகங்கள் அருகே கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும். குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஒன்றிய அரசின் சட்டத்தில் கடுமையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

குட்கா, ‘கூல் லிப்’ உள்ளிட்ட புகையிலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு மேலும் பல கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் புகையிலை பொருட்களுக்கு அடிமையாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; எனவே, முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தவிட்டுள்ளார்.

The post பள்ளி வளாகங்கள் அருகே கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: