சிறுவாச்சூரில் புகையிலை, போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

 

பெரம்பலூர், செப்.25: சிறுவாச்சூரில் பொது சுகாதாரத் துறையின் சார்பாக, புகையிலை மற்றும் போதைபொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிறுவாச்சூர் ஊராட்சியில் பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, பெரம்பலூர் மாவட்ட மாவட்ட புகையிலை கட்டுப் பாட்டு மையம் ஆகியன இணைந்து நடத்தும் புகை யிலை மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப் புணர்வு பேரணி சிறுவாச்சூர் ஊராட்சிமன்ற தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் நடை பெற்றது.

இதில் சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலய பப்ளிக் பள்ளி முதல்வர் ராம்குமார், பெரம்பலூர் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய ஆலோசகர் டாக்டர் வனிதா, பெரம்பலூர் மாவட்ட சுகாதாரக் கல்வியாளர் சீனிவாசன், கல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவ,மாணவியர் 200க் கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் புகையிலை ஒழிப்பு, போதைப் பொருட்கள் ஒழிப்பு, புகை யிலைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி கோஷங்கள் எழுப்பியவா றும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளைக் கைகளில் ஏந்தியபடியும், விழிப்புணர்வுத் துண்டு பிரசுரங்களை வழங்கிய படியும் சிறுவாச்சூர் கிராமத்தின் முக்கிய வீதிகளில் பேரணி நடைபெற்றது.

The post சிறுவாச்சூரில் புகையிலை, போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: