ஜெயங்கொண்டத்தில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி

 

ஜெயங்கொண்டம், செப்.25: ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சி தூய்மையே எனது பழக்கம் தூய்மையே எனது வழக்கம் தூய்மையே சேவை என்ற தலைப்பின் கீழ் தஞ்சாவூர் நிர்வாக மண்டல இயக்குனர் உத்தரவின்படியும், ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அசோக் குமார் தலைமையில் தூய்மை பணியாளர்களை கொண்டு ஜெயங்கொண்டம் நகராட்சி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேருந்து நிலையத்தின் தொடங்கி கடைவீதியில் வழியாக பேரணி நடைபெற்றது.

பேரணியின் போது தூய்மை பற்றிய கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூய்மை பணியாளர்கள் கோஷமிட்டு சென்றனர். மேலும் பேருந்து நிலையத்திலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்திலும் நின்று தூய்மை எனது வழக்கம் எனது பழக்கம் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் களப்பணி உதவியாளர் விஜயகுமார், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் பாலகுமாரன், உமா தேவி, கலையரசி, ரேகா, ஜோதி மற்றும் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

The post ஜெயங்கொண்டத்தில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: