கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி 20 டன் பூக்கள் விற்பனையின்றி தேக்கம்: குப்பையில் கொட்டப்படுகிறது

அண்ணாநகர்,: கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்நிலையில், விசேஷ மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சரிந்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லி ரூ300க்கும், ஐஸ் மல்லி ரூ250க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி ரூ200க்கும், கனகாம்பரம் ரூ400க்கும்,

சாமந்தி ரூ50க்கும், சம்பங்கி ரூ70க்கும், அரளி ரூ60க்கும், பன்னீர்ரோஸ் ரூ30க்கும், சாக்லேட் ரோஸ் ரூ40க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை பூக்களின் விலை மேலும் சரிந்து ஒரு கிலோ மல்லி ரூ230க்கும், ஐஸ் மல்லி ரூ220க்கும், முல்லை மற்றும் ஜாதி மல்லி ரூ200க்கும், கனகாம்பரம் ரூ300க்கும், சாமந்தி ரூ20க்கும், சம்பங்கி ரூ15க்கும், அரளி பூ ரூ50க்கும், பன்னீர்ரோஸ் ரூ10க்கும் சாக்லேட் ரோஸ் ரூ40க்கும் விற்பனை செய்யப்பட்டது.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி 20 டன் பூக்கள் விற்பனையின்றி தேக்கம்: குப்பையில் கொட்டப்படுகிறது appeared first on Dinakaran.

Related Stories: