மூடிய ரேஷன் கடையை திறக்ககோரி பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டம்

மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்குழி கிழக்கில் 14, 15 வார்டு பகுதியில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ரேஷன் கடையில் தான் பொதுமக்கள் பொருட்களை வாங்கி வந்தனர். பராமரிப்பு பணி காரணமாக 3 ஆண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கடை மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடை மீண்டும் திறக்கப்பட்டு ஒன்னரை ஆண்டு காலம் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடை மீண்டும் திடீரென மூடப்பட்டு எட்டு மாதங்கள் ஆகியும் ரேஷன் கடை திறக்கப்படாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அலைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்த கடையை பயன்படுத்தி வந்த பயனாளர்கள் தற்போது இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கருங்குழி பேரூராட்சியின் மற்றொரு பகுதியில் அமைந்துள்ள வேறொரு கடைக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு ரயில்வே இருப்பு பாதையை கடந்து வருகின்றனர். மேலும், அங்கிருந்து ரேஷன் பொருட்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு வர 200 ரூபாய் கொடுத்து ஆட்டோக்களில் எடுத்து வர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் பணம், நேரம் வீணாவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, ஏற்கனவே செயல்பட்டு வந்த இந்த ரேஷன் கடையினை மீண்டும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், வாரத்திற்கு இரண்டு நாட்கள் கடையை திறக்க வலியுறுத்தியும் 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று, மூடப்பட்டுள்ள ரேஷன் கடையை முற்றுயிட்டு போராட்டம் நடத்தினர்.

The post மூடிய ரேஷன் கடையை திறக்ககோரி பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: