சென்னை மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி: உச்சத்தை தொட்டது தங்கம் விலை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7000-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.56,000 தொட்டு புதிய உச்சம் அடைந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி கிராமுக்கு ரூ.98க்கு விற்பனை செய்யப்படுகிறது

தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக உயர தொடங்கியது. தினம், தினம் புதிய உச்சத்தையும் தொட்டது. அமெரிக்காவில் கடன் வட்டி விகிதங்கள் குறைந்ததையடுத்து சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருக்கும் தங்கத்தின் விலை தற்பொழுது எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்றங்களை சந்தித்து வருகிறது.

சர்வதேச பொருளாதார சூழ்நிலை, உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அமெரிக்‍காவில் அரசு துறைகள் முடங்கி பொருளாதாரம் கீழ் நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உலகம் முழுவதும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாகவும், உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதாகவும், வரும் நாட்களில் மேலும் இது அதிகரிக்‍க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.56,000-க்கு விற்கப்படுகிறது. இந்த விலை ஏற்றம் புதிய உச்சத்தையும் தொட்டது. இந்த விலை உயர்வினால் நகை வாங்குவோர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

The post சென்னை மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி: உச்சத்தை தொட்டது தங்கம் விலை appeared first on Dinakaran.

Related Stories: