ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமமக்கள்

அருப்புக்கோட்டை, செப்.24: ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கிராமமக்கள் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அருப்புக்கோட்டை அருகே உள்ளது கீழ அழகியநல்லூர். இங்கு சுமார் 750 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பேருந்துநிறுத்தம் அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வரும் 28 செண்ட் காலியிடம் வருவாய் ஆவணங்களில் சர்க்கார் புறம்போக்கு என உள்ளது. இந்த இடத்தில் பொதுமக்கள் ரேசன்கடை கட்டிடம் கட்டித்தர கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இடத்தினை அதே ஊரைச்சேர்ந்த சிலர் தகரசெட் அமைத்தும், கல்தூண் ஊன்றியும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நபராக ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். அரசுக்கு சொந்தமான காலி இடத்தை பொதுமக்கள் பயன்படுத்திவரும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பை அகற்றி ஊர்பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கீழ அழகியநல்லூர் கிராம மக்கள் அருப்புக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்டிஓ நேர்முக உதவியாளர் ரமணனிடம் மனு கொடுத்தபின் கலைந்து சென்றனர்.

The post ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: