விறுவிறு பிரசாரம் ஓய்ந்தது: காஷ்மீரில் நாளை 2ம் கட்ட தேர்தல்

காஷ்மீரில் 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று ஓய்ந்தது. நாளை 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்.18, செப்.25, அக்.1 ஆகிய 3 கட்டங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் செப்.18ம் தேதி 24 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது. நாளை 26 தொகுதிகளில் 2ம் கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் பிரதமர் மோடி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும். 26 தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 3502 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பூத்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் உள்பட 239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

The post விறுவிறு பிரசாரம் ஓய்ந்தது: காஷ்மீரில் நாளை 2ம் கட்ட தேர்தல் appeared first on Dinakaran.

Related Stories: