×

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் சமூகநீதி நாள் விழா வினாடி-வினா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்: கல்லூரி முதல்வர் வழங்கினார்

 

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த சமூகநீதி நாள் விழாவில், வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழினை கல்லூரி முதல்வர் மனுவேல்ராஜ் வழங்கினார். மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூகநீதி நாள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் மனுவேல்ராஜ் தலைமை தாங்கினார்.

கல்லூரி நிர்வாக இயக்குநர் பி.மணி முன்னிலை வகித்தார். முன்னதாக, தந்தை பெரியார் குறித்தும், சமூகநீதி நாளின் சிறப்புகள் குறித்தும் கல்லூரி மாணவர்களிடையே வினாடி-வினா போட்டிகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில், மாணவர்களிடையே கல்லூரி முதல்வர் மனுவேல்ராஜ் பேசுகையில், ‘தந்தை பெரியாரின் சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் அடிமைத்தனத்தை ஒழிக்க, பெண்கள் சம உரிமை பெற தனது சமூகநீதி கருத்துக்களால் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியவர்.

அதை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உண்மையான சமூக நீதியை பற்றி நீங்கள் புரிந்துகொள்ளவும், அறிந்து கொள்ளவும் முடியும் என்று எடுத்துரைத்தார். இதனையடுத்து, வினாடி-வினா போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், மாணவ – மாணவிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

The post தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் சமூகநீதி நாள் விழா வினாடி-வினா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்: கல்லூரி முதல்வர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Social Justice Day Ceremony Quiz Contest ,Dhanalakshmi Sinivasan College ,Kanchipuram ,Periyar ,Mamallapuram Dhanalakshmi Sinivasan College ,Principal ,Manuelraj ,Mamallapuram Thanalaxmi Sinivasan College of Engineering and Technology ,Social Justice Day Ceremony ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தமாகா...