1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அறிவுசார் குறைபாடு, அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதம் பாதித்த குழந்தைகளுக்கு உபகரணம் வழங்கும் திட்டத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில்;

1. முதலமைச்சர் 21.06.2024 அன்று சட்டமன்றப் பேரவையில் 2024 2025-ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானிய கோரிக்கையின் போது இன்னபிறவற்றுடன் கீழ்கண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

“அறிவுசார் குறைபாடு மற்றும் அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.1.00 கோடி மதிப்பில் நவீன இயன்முறை உபகரணம் (Standing Frame) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்”.

2. மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர், தனது கடிதத்தில், மாற்றுத்திறனாளிகள் பிறருடைய உதவியின்றி எளிதாக நடமாடுவதற்குத் தேவையான பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. என்றும் 2024-2025ம் நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.1.00 கோடி மதிப்பில் நவீன இயன்முறை உபகரணம் (Standing Frame) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது என்றும் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்த நிலையிலும், நிற்றல், நடத்தல் உள்ளிட்ட உடலின் பல்வேறு நிலைகளிலும் நவீன இயன்முறை பயிற்சிகளுக்கு ஏதுவாக, பயனாளிகளுக்கு நவீன இயன்முறை சிகிச்சை உபகரணத்தை ஒரு உபகரணத்தின் விலை ரூ.10,000/- என்ற மதிப்பில் 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வழங்கும் திட்டத்திற்காக ரூ.1.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வழங்குமாறு அரசினை கோரியுள்ளார்.

3. மேற்காணும் சூழ்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் செயற்குறிப்பினை நன்கு பரிசீலித்த அரசு அதனை ஏற்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக செல்லவும் பள்ளி / மருத்துவமனை சென்று வரவும், வேறொருவர் துணையின்றி தன்னிம்பிக்கையுடன் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக பல்வேறு உதவி உபகரணங்கள் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு அரசால் விலையில்லாமல் வழங்கப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க அறிவுசார் குறைபாடு மற்றும் அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1,000 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு 5.10,000/- மதிப்புடைய நவீன இயன்முறை உபகரணங்கள் (Standing Frame) வழங்கும் திட்டத்தில் பயன்பெற்றிட ரூ.1,00,00,000/- (ரூ.10,000X1,000) நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணையிடுகிறது.

4. மேலே பத்தி 3-ல் ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினம் பின்வரும் கணக்கு தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்:- “2235 – சமூகப் பாதுகாப்பு நலனும் 02 – சமூக நலன் – 101 மாற்றுத்திறனாளிகள் நலன் மாநிலச் செலவினங்கள் NB – தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர் இயக்குவதற்கான சிறப்பு உபகரணம் – 324 – பொருள்களும் வழங்கலும் – 01 – பொருள்களும் வழங்கலும்” (IFHRMS 5…2235-02-101-NB-32401)

5. மேலே பத்தி 3- ஒப்பளிக்கப்பட்ட செலவினம் ஒரு “புதுப் துணைப்பணி” குறித்த செலவினமாகும். இதற்கு சட்ட மன்றப் பேரவையில் ஒப்புதல் பின்னர் பெறப்படும். மேற்குறித்த ஒப்புதலை எதிர்நோக்கி முன்பணத்தை அனுமதிக்கின்ற ஆணைகள் நிதித் (வ.செ.பொ.-1) துறையில் தனியாக பிறப்பிக்கப்படும் அடுத்து வரும் துணை மானியக் கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பெறும் வரையில் நடப்பாண்டிற்கு தேவைப்படும் செலவினத்தை சரியாகக் கணக்கிட்டு, எதிர்பாரா செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறத் தேவையான விண்ணப்பதை எதிர்பாரா செலவின நிதி விதிகள் 1963-ல் உள்ள அட்டவணை “A” படிவத்துடன் இவ்வரசாணையின் நகலுடன் இணைத்து நிதித் (வ.செ.பொ.1) துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார். மேலும் இக்கூடுதல் செலவினத்திற்கான உரிய கருத்துருவை 2024-2025-ஆம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்ப்பதற்கு தவறாது உரிய நேரத்தில் நிதித்(ச.ந/வ.செ.பொது-I) துறைக்கு அனுப்பிவைக்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

The post 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: