தமிழ் திரையுலகில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க கூட்டு நடவடிக்கை குழு என்ற புதிய கமிட்டியை உருவாக்க முடிவு..!!

சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள தனித்தனி துறைகளை சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கிய நிர்வாகிகளை கொண்டு ஜாயிண்ட் ஆக்ஷன் கமிட்டி என்ற புதிய கமிட்டியை உருவாக்க தமிழ் திரையுலகம் முடிவு செய்துள்ளது. கோலிவுட்டில் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், திரைப்பட விநியோகிஸ்தர்கள் சங்கம், ஸ்டண்ட், கலை, ஒப்பனை உள்ளிட்ட 24 துறைகளை உள்ளடக்கிய பெப்சி யூனியனும் திரைத்துறையில் முக்கிய அங்கமாக இயங்கி வருகிறது.

திரைத்துறையில் பல்வேறு சங்கங்களில் பல பிரச்சனைகள் அவ்வப்போது எழுந்து வரும் நிலையில் அதனை ஒரே கமிட்டி மூலமாக தீர்வுகான நடிகர் சங்கம் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமா துறையில் அதனை சார்ந்து இயங்க கூடிய சங்கங்களும்,பெப்சி யூனியனும் ஒன்றுக்கு கூடி ஒவ்வொரு அமைப்புகளிலும் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகள் 3-5 பேர் நியமிக்கப்பட்டு அதில் இயங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கிய நிர்வாகிகளை கொண்டு கூட்டு நடவடிக்கை குழு அமைக்க திட்டமிட்டுள்ளது.

The post தமிழ் திரையுலகில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க கூட்டு நடவடிக்கை குழு என்ற புதிய கமிட்டியை உருவாக்க முடிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: