×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர்!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ததால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பாவில் சீசிங் ராஜாவை நேற்று தனிப்படை போலீஸ் கைது செய்த நிலையில் இன்று என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். ரவுடி சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உட்பட 33 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் சென்னையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். திருவேங்கடத்தை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இரண்டாவது என்கவுன்ட்டர். சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு நடந்திருக்கும் 3வது என்கவுன்ட்டர். ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்கு உட்பட 32 வழக்குகள் உள்ளன. ஐந்து முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் சீசிங் ராஜா.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். பக்கிங்காம் கால்வாய் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்ற அழைத்து சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியால் காவல் துறை வாகனத்தை நோக்கி சீசிங் ராஜா சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் 2 முறை சுட்டதில் சீசிங் ராஜாவின் வயிறு, நெஞ்சில் குண்டு பாய்ந்ததாக தகவல்கள் கூறப்படுகிறது.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர்! appeared first on Dinakaran.

Tags : Rawudi Saising Raja ,Armstrong ,Chennai ,Rawudi Caising Raja ,AP ,Rawudi Siesing Raja ,
× RELATED ரவுடி சீசிங் ராஜா குறித்து தகவல்...