×

தமிழக மீனவர்கள் 37 பேர் கைது புதிய இலங்கை அதிபருடன் ஒன்றிய அரசு பேச வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. மீனவர்களை கைது செய்வது, மீனவர்களைத் தாக்குவது, மீனவர்களின் உடமைகளைக் கொள்ளையடிப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது என அனைத்து வழிகளிலும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை இலங்கை அரசு பறித்துக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக்குழுவை அமைத்து பேச்சுகளைத் தொடங்க ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

The post தமிழக மீனவர்கள் 37 பேர் கைது புதிய இலங்கை அதிபருடன் ஒன்றிய அரசு பேச வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Union government ,president ,Anbumani ,CHENNAI ,BAMAK ,Nagai ,Mayiladuthurai ,Sinhalese Navy ,Dinakaran ,
× RELATED நீட் விலக்கு ஏன் தேவை? விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு 4 முறை கடிதம்!