×

8 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்: குடியரசுத்தலைவர் உத்தரவு

டெல்லி: 8 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று ஸ்ரீராமை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மன்மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இமாச்சல் ஐகோர்ட் தலைமை நீதிபதி ராமச்சந்திர ராவ், ஜார்க்கண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஐகோர்ட் நீதிபதி ராஜீவ் ஷக்தர், ஹிமாச்சல் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் கைத், மத்தியப்பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி இந்திர பிரசன்ன முகர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை ஐகோர்ட் நீதிபதி நிதின் மதுகர் ஜம்தர், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டஷி ரப்ஸ்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதிகள் நியமன தாமதம் குறித்து சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பிய நிலையில் புதிய நீதிபதிகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

The post 8 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்: குடியரசுத்தலைவர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Courts ,Republican ,Delhi ,Chief Justice ,Chennai High Court ,K. R. Sriram ,Sriram ,Supreme Court Collegium ,Manmohan ,Delhi High Court ,Dinakaran ,
× RELATED கொலீஜியம் பரிந்துரை செய்தும்...