முதல்வர் கோப்பை ஹாக்கி போட்டி அழகப்பா மாடல் பள்ளி மாணவர்கள் 3ம் இடம்

காரைக்குடி, செப். 21: சிவகங்கையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடந்தது. இதில் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி அணி கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதல்வர் கோப்பை போட்டியில் 3ம் இடம் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற அணியை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளிக்குழு தலைவர் ஜி.ரவி, பதிவாளர், பள்ளிக்குழு செயலாளர் செந்தில்ராஜன், பள்ளி தலைமையாசிரியர் ராஜபாண்டியன், உடற்கல்வி இயக்குநர் முத்துகண்ணன், உடற்கல்வி ஆசிரியர் ரத்தினராஜா மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் அழகப்பா மாதிரி ஹாக்கி கிளப் வீரர்கள் பாராட்டினர்.

The post முதல்வர் கோப்பை ஹாக்கி போட்டி அழகப்பா மாடல் பள்ளி மாணவர்கள் 3ம் இடம் appeared first on Dinakaran.

Related Stories: