பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை, அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து, 3 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா நேற்று நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் பேசியதாவது: மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு வகுத்துள்ள, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவர்களுடைய வேலைவாய்ப்பிற்கிணங்க திறன்களை மேம்படுத்திக்கொண்டு, வேலைவாய்ப்பை தேடுவது மட்டுமல்லாமல் சுயதொழில் தொடங்க முயற்சி எடுத்து மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி தரவேண்டும் என்றும், அரசு உருவாக்கியுள்ள தமிழ்நாடு அரசு தொழில் சார்ந்த வேலைவாய்ப்புகளை மொபைல் ஆட்டோ, மொபைல் எலக்ட்ரானிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி பயன்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

இதில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 150 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் மூலமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் 300 மாணவர்கள் பயனடைவார்கள். இதன் மூலமாக மாணவர்களுக்கு கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், லீடர்ஷிப் கில்ஸ், பைனான்சியல் அண்ட் பேங்கிங் ஏன்டாஷிப் கில்ஸ் ஆகிய வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்திக்கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் புல முதல்வர் கவிதா, பணியமர்த்தல் அதிகாரி சந்திரசேகர், உதவி பேராசிரியர் ரவி, துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

The post பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: