இதுகுறித்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் யுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 11 மாதங்களாக ஒருபிடி மணல்கூட கிடைக்கவில்லை, எம் சாண்ட் மணல்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால், சம்மந்தப்பட்ட அந்த அமைச்சரின் பதவியை தமிழக முதல்வரே நேரடி பார்வையில் வைத்து, மணல் குவாரியை மீண்டும் அமல்படுத்தினால் அரசுக்கு அதிகளவிலான வருவாய் கிடைக்கும். இதுகுறித்து, முறையிடுவதற்காக சிங்கபெருமாள்கோவில் பகுதியில் இருந்து 500 லாரிகளுடன் கோட்டை நோக்கி பேரணியாக செல்ல இருந்தநிலையில், தமிழக போலீசார் தடுத்து நிறுத்திவிட்டனர். இருந்தாலும் நாங்கள் அடுத்த கட்டமாக முதல்வரின் வீட்டுக்கே சென்று முறையிடுவோம். அதுமட்டுமின்றி, எத்தனை தடைகள் வந்தாலும் முதல்வரை சந்தித்து எங்களது குறைகளை சொல்லாமல் விடமாடோம் என்று தெரிவித்தார்.
The post குவாரிகளை திறக்க வலியுறுத்தி தொடங்கிய லாரி உரிமையாளர்கள் சங்க பேரணி தடுத்து நிறுத்தம்: செங்கல்பட்டு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.