குரூப் 4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு? விரைவில் அறிவிக்கிறது டிஎன்பிஎஸ்சி

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பதவிகளில் கிராம நிர்வாக அலுவலர்-108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனிச் செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, கிளர்க்- 3, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர் மற்றும் வன காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

இப்பதவிகளுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று அண்மையில் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.  தொடர்ந்து கடந்த 11ம் தேதி குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி உயர்த்தியது. அதாவது இளநிலை உதவியாளர் 128 பணியிடங்களும், தட்டச்சர்-14, சுருக்கெழுத்து தட்டச்சர்-15, கணக்காளர்-1, உதவியாளர்-3, இளநிலை கணக்கு உதவியாளர்-8, வன பாதுகாவலர் மற்றும் வன காவலர்-70, பில் கலெக்டர்-47, உதவி விற்பனையாளர்-194 என 480 பணியிடங்கள் உயர்த்தப்பட்டன. இதனால் குரூப் 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 724 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ள நிலையில், பணியிடங்களுக்கான எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு துறைகளில் காலி பணியிடங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து குரூப் 4 காலி பணியிடத்தை மேலும் அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரம் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post குரூப் 4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு? விரைவில் அறிவிக்கிறது டிஎன்பிஎஸ்சி appeared first on Dinakaran.

Related Stories: