×

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கேசவ விநாயகத்தை விசாரிக்க நீதிமன்ற அனுமதி தேவை என்ற உத்தரவு ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!!

டெல்லி: மக்களவை தேர்தலின் போது ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அனுமதி பெற்று பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்தை விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த எப்ரல் 6-ம் தேதி தம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யபட்டது. இது தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நாயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் வேலை பார்க்க கூடியவர்கள் மற்றும் அவருக்கு தெரிந்தவர்கள் என மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அனுமதியின்றி பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயத்தை விசாரணைக்கு அழைக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிசிஐடி மேல்முறையீடு செய்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில், கேசவ விநாயகத்தை நீதிமன்ற அனுமதியுடன் அழைக்க வேண்டுமென்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட நபருக்கு, ஒரு வாரத்திற்கு முன் நோட்டீஸ் வழங்கி விசாரிக்கலாம் என்று சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

The post ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கேசவ விநாயகத்தை விசாரிக்க நீதிமன்ற அனுமதி தேவை என்ற உத்தரவு ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Tags : SUPREME COURT ,KESAWA VINAYAKAH ,Delhi ,BJP ,Kesava Vinayak ,Dinakaran ,
× RELATED ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்றத்தின்...