அக்டோபர் 1ல் இருந்து 10ம் தேதிக்குள் சென்னை பீச்-திருவண்ணாமலை, அரக்கோணம்-சேலம் மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

*பக்தர்கள், பயணிகள் வரவேற்பு

பாணாவரம் : ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ரயில் நிலையம் (பாணாவரம்) வழியாக நின்று செல்லும் மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட இருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை பீச் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை வரை இயக்கப்படும் மெமு ரயில், அரக்கோணத்தில் இருந்து சேலம் வரை இயக்கப்படும் மெமு ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் திருவண்ணாமலை செல்லும் பக்தர்களும், காட்பாடி வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்படுவதாகவும், ஆகவே இநஙம மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி, பயணிகளின் கோரிக்கையை ஏற்று தென்னக ரயில்வே நிர்வாகம்,‌ சென்னைபீச்- திருவண்ணாமலை, அரக்கோணம்- சேலம் ஆகிய ரயில்களில் ஏற்கனவே 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதியில் இருந்து 10ம் தேதிக்குள் இரு ரயில்களிலும் கூடுதலாக தலா 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே போக்குவரத்து பிரிவு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பக்தர்களும், அரக்கோணத்தில் இருந்து காட்பாடி, சேலம் மார்க்கமாக செல்லும் பயணிகளும் தென்னக ரயில்வேயின் இந்த அறிவிப்பை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

The post அக்டோபர் 1ல் இருந்து 10ம் தேதிக்குள் சென்னை பீச்-திருவண்ணாமலை, அரக்கோணம்-சேலம் மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: