×

மூன்று அம்சகோரிக்கையை வலியுறுத்தி வலங்கைமான் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

 

வலங்கைமான், செப். 20: வலங்கைமானில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தமிழக அரசு பயிர் காப்பீட்டு திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வலங்கைமானில் தமிழ்நாடு விவசாயசங்க தலைவர் கலியபெருமாள் தலைமையில் செயலாளர் சின்னராசா மாவட்ட பொருளாளர் ராவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் கண்டன உரை ஆற்றினர்.

உதயகுமார், செல்வராஜ், பாக்யராஜ், கலியமூர்த்தி, பூசாந்திரம் நகர செயலாளர் ராதா சிபிஐ மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் பங்கு பெற்றனர். ஆர்ப்பாட்டத்தில் 2023-24ம் ஆண்டு வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தில் நெல் உள்ளிட்ட பயிர்களின் பாதிப்புக்கு ஏற்ற இழப்பீடு வழங்காததை கண்டித்தும், உரிய அளவு வழங்க வலியுறுத்தியும் தமிழக அரசு காப்பீட்டு திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிறைவில் ஒன்றிய பொருளாளர், மருதையன் நன்றி கூறினார்.

The post மூன்று அம்சகோரிக்கையை வலியுறுத்தி வலங்கைமான் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Walangaiman Farmers Association ,Valangaiman ,Tamil Nadu Farmers' Association ,Tamil Nadu government ,Tamil Nadu Farmers Union ,President ,Kaliaperumal ,Valangaiman Farmers Union ,Dinakaran ,
× RELATED முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் சேகரிக்கும் பணி தீவிரம்