அரியானா பா.ஜ தேர்தல் அறிக்கை பெண்களுக்கு மாதம் ரூ.2100 மாணவிகளுக்கு ஸ்கூட்டர்

சண்டிகர்: அரியானா சட்டப் பேரவை க்கு அக்.5ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாஜ தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. ரோக்தக்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் நயாப் சிங் சைனி, ஒன்றிய அமைச்சர்கள் கட்டார், ராவ் இந்தர்ஜித் சிங், கேபி குர்ஜார் உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜ தலைவர் ஜேபி நட்டா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில், மாநிலத்தில் 24 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, மாநிலத்தை சேர்ந்த ஒவ்வொரு அக்னிவீரருக்கும் அரசு வேலை வழங்கப்படும்,

ஓபிசி, எஸ்சி சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் நாட்டின் எந்த அரசு மருத்துவ கல்லூரி அல்லது பொறியியல் கல்லூரில் படித்தாலும் உதவித்தொகை மற்றும் கிராமப்புறங்களில் கல்லூரி செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும், பெண்களுக்கு மாதம் ரூ.2100 உதவித்தொகை, 2லட்சம் அரசு வேலைகள் நிரப்பப்படும், சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும், 5 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜ அளித்துள்ளது.

The post அரியானா பா.ஜ தேர்தல் அறிக்கை பெண்களுக்கு மாதம் ரூ.2100 மாணவிகளுக்கு ஸ்கூட்டர் appeared first on Dinakaran.

Related Stories: