சேலத்தில் பழைய நாணயத்துக்கு ரூ.36 லட்சம் தருவதாக ஆன்லைன் மூலம் தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி..!!

சேலம்: சேலத்தில் பழைய நாணயத்துக்கு ரூ.36 லட்சம் தருவதாக ஆன்லைன் மூலம் தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பழைய நாணயங்கள் வைத்திருப்போர் தொடர்பு கொண்டால் லட்சகணக்கில் சம்பாதிக்கலாம் என மூட்டை தூக்கும் தொழிலாளி ராஜன் என்பவரின் செல்போனுக்கு தொடர்ந்து விளம்பரம் வந்துள்ளது. ராஜன் விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசி பேசியுள்ளார். இந்திரா காந்தி உருவம் பொறித்த நாணயத்தின் படத்தை தனக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்ப ராஜனிடம் கூறியுள்ளனர். நாணயங்களின் படத்தை அனுப்பிய பிறகு 2 பெண்கள் தொடர்பு கொண்டு ரூ.36 லட்சத்திற்கு விற்கலாம் என கூறியுள்ளனர்.

அரசின் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் வியாபாரம் என்பதால் பதிவுக் கட்டணம் செலுத்த கூறியுள்ளனர். பெண்கள் கூறியதை நம்பி ராஜன் 22 தவணைகளில் ரூ.3.82 லட்சத்தை அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட கும்பல் மேலும் ராஜனிடம் பணம் கேட்டபோது, தான் ஏமாந்ததை உணர்ந்தார். மோசடி கும்பலை தொடர்பு கொள்ள முடியாததை அடுத்து சேலம் சைபர்கிரைம் போலீசில் தொழிலாளி ராஜன் புகார் அளித்தார். புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட திலீப் (29), ஜெயவேரியாபானு (26), செர்ஷாகான் (35), முகமது இம்ரான் (24) அர்ஷியாபானு (23) ஆகியோர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் மோசடி செய்வது குறித்து அரியானாவில்பயிற்சி பெற்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

 

The post சேலத்தில் பழைய நாணயத்துக்கு ரூ.36 லட்சம் தருவதாக ஆன்லைன் மூலம் தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி..!! appeared first on Dinakaran.

Related Stories: