ஆனைமலை பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை, கோட்டூர், கோபாலபுரம், அம்பாராம்பாளையம், மயிலாடும்துறை, காளியாபுரம், ஒடையகுளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் பலர் ஈடுபடுகின்றனர். இதில் ஆனைமலை மற்றும் மயிலாடுதுறை, ரமணமுதலிபுதூர் உள்ளிட்ட பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு, முதல் போகத்திற்காக நாற்று நடவு செய்யப்பட்டது. தற்போது நெல் நாற்றுகள் செழிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் கடந்த வாரத்தில், நாற்றுகளிடையே களை பறிக்கும் பணி நடைபெற்றது.

நெல் நாற்றுகளை நேர்த்தியாக கொண்டுவர, கையாலும், ஸ்பிரே இயந்திராத்தாலும் மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. தற்போது, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பல இடங்களில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அந்த இடங்களில் தற்போது நாற்றுகள் செழிப்படைந்து நெல் விளைச்சல் துவங்கி பச்சை பசேல் என இருப்பதால், இன்னும் சில மாதங்களில் நெல் அறுவடைக்கு தயாராகி விடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

The post ஆனைமலை பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் appeared first on Dinakaran.

Related Stories: