சென்னையில் அமைதியாக நடந்த விநாயகர் ஊர்வலம் சிறப்பாக பாதுகாப்பு பணி செய்த போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7ம் தேதி நடந்தது. இதற்காக சென்னை முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, வழிபாட்டிற்காக வைக்கப்பட்ட 1878 விநாயகர் சிலைகள் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட 17 வழித்தடங்கள் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 இடங்களில் கடலில் கரைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி, சென்னை பெருநகர கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் ஆகியோர் தலைமையில் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என 16,500 போலீசார் மற்றும் ஊர்காவல்படையை சேர்ந்த 2,000 பேர் கடந்த ஒரு வாரமாக பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதனால் இந்த ஆண்டு எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை மற்றும் ஊர்வலம் நடந்து முடிந்துள்ளது. பொதுவாக பிரச்னைகள் ஏற்படும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த பகுதிகளிலும் இந்த ஆண்டு அமைதியான முறையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்து முடிந்துள்ளது.எனவே, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிறப்பான பணிகளை மேற்கொண்ட பெருநகர காவல்துறையில் பணியாற்றும் கூடுதல் கமிஷனர்கள் உட்பட 16,500 காவலர்கள் மற்றும் 2 ஆயிரம் ஊர்காவல்படை வீரர்களுக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் அமைதியாக நடந்த விநாயகர் ஊர்வலம் சிறப்பாக பாதுகாப்பு பணி செய்த போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: