சென்னை: திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் சமூகநீதி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்றும், பிறந்தநாள் அன்று சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு செப்.6ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்ததற்கிணங்க, பெரியார் பிறந்த நாளான செப்.17ம் தேதி காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
The post பெரியார் பிறந்த நாளில் திமுக சார்பில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.